×

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு 2,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர்:  கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள  கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 21 ஆயிரம்  கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று மதியம் 30ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,594 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8347 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.  அது  நேற்று மாலை 3 மணியளவில் 2ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.  கால்வாயில் விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 113.030 அடியாகவும், நீர் இருப்பு 82.87 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags : Mettur Dam , Mettur Dam, Delta Irrigation, Water Resources
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு