×

தேர்தலுக்காகத்தான் கூட்டணி பாஜவுடன் அதிமுகவுக்கு ஒட்டோ, உறவோ கிடையாது: கே.பி.முனுசாமி சொல்கிறார்

நெல்லை: பாஜவுடன் கொள்கை ரீதியான ஒட்டோ, உறவோ அதிமுகவுக்கு கிடையாது என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். நெல்லையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று  அளித்த பேட்டி: எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவில் 13 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் இருந்தனர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வளர்ச்சி அடைந்து ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஒரே குடும்பத்தில்  உள்ளவர்கள் போல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

 பாஜவுடன் அதிமுகவுக்கு கொள்கை ரீதியான ஒட்டோ, உறவோ கிடையாது. நாங்கள் அமைத்தது அரசியலில் தேர்தல் அடிப்படையிலான கூட்டணிதான். பாஜவும், அதிமுகவும் மாறுபட்ட கருத்துக்களை உடைய கட்சிகள். மாநில மக்களின்  நலனை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தால் நிச்சயமாக எதிர்ப்பு குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Bharatiya Janata Party ,KP Munasamy. The AIADMK ,election ,KP Munasamy , Election, BJP, AIADMK, Otto, KP Munusamy
× RELATED புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய...