‘அசுரன்’ படத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, டிவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தை சாடும்- சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: