×

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் 100வது ஆண்டு துவக்கவிழா மதரீதியான சவால்களை சந்திக்கும் நிலையில் உள்ளோம்: பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: இந்தியாவில் உள்ள  இடதுசாரி கட்சிகள் மதரீதியான சவால்களை சந்திக்கும் நிலையில் உள்ளது என்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செங்கொடி ஏற்றி நேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கிய தலைவர்களின் ஒருவருமான சங்கரய்யா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதனுடைய நூற்றாண்டு தொடக்க விழா நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதைப்போன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

மேலும் ஒரு ஆண்டு முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் நாட்டிற்கு ஆற்றிய பங்கு குறித்து நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எடுத்து சொல்வது என்று முடிவு செய்துள்ளோம்.  வருகிற 20ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழா வடசென்னையில் நடைபெறுகிறது. இதில் பிரகாஷ்கரத் கலந்து கொள்கிறார். இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் தற்போது ஒரு மதரீதியான சவால்களை கொண்ட ஆட்சியை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று வந்திருக்க கூடிய பிரதமர் மோடி ஒரு பக்கம் கார்ப்பரேட் பொருளாதார கொள்கையை கடைப்பிடிப்பதும், இன்னொரு பக்கம் மதவெறி கோட்பாட்டை அமலாக்குவதும்,  இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்து ஒற்றை கலாசாரத்தை நிறைவேற்ற முயற்சிப்பதும் போராடி பெற்ற சுதந்திரத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முயற்சித்து கொண்டு இருக்கிற மோசமான சவால்களை எதிர்த்து போராட கூடிய கடமை கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகளுக்கு உண்டு என்ற பணியை மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளோம்.


Tags : anniversary ,Balakrishnan Interview. ,Communist ,India , 100th Anniversary , Communist Movement o,Balakrishnan
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா