×

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: 12சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்,  ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள் என அறிவித்தது இந்நிலையில் தமிழக அரசு 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Tags : civil servants ,Tamil Nadu , Tamil Nadu Government employee,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...