×

சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க அனுமதி: ஐகோர்ட்

சென்னை: சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கையில் தனியார் செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக மாணவி குற்றச்சாட்டு தெரிவித்தார். மாணவிக்கு திருமணம் நடந்த சில நாட்களில் மருத்துவ பரிசோதனையில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 3 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து பெண்ணை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் கணவர் விட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் தனக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கர்ப்பிணி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்தனர். அதில்; சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மேலும் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து மரபணு ஆய்வு செய்யவும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : fetus ,Sivaganga , Sivaganga, rape victim, allowed to abort 13 weeks
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!