ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி... டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொடர்பு முழுமையாக இருக்கிறது எனவே அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருப்பதால் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால் 15 நாட்கள் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவரிடம் 7 நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் வரும் 14-ம் தேதி மீண்டும் சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டியிருந்தார். இந்த வழக்கை பொறுத்தவரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆக.21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதனை தொடர்ந்து செப்.5-ம் தேதியிலிருந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. ஏற்கனவே இந்த வழக்கை பொறுத்தவரையில் 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது.

செப்.5-ம் தேதி அமலாக்கத்துறை முன்பு சரணடைய தயாராக இருப்பதாக அவர் கூறிய போது அப்போது அவரை நாங்கள் கைது செய்ய அவசியம் ஏற்படவில்லை. எனவே தான் அப்போவது அவரை நாங்கள் கைது செய்யவில்லை. ஆனால் 9 பேரிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம். தற்போது எங்களிடம் ப.சிதம்பரத்துக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும். எனவே 15 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜராயிருந்த வழக்கறிஞர் கூறினார்.

ஏற்கனவே கடந்த செப்.5-ம் தேதி சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக தயாராக இருந்த போது வேண்டாம் என்று கூறிய அமலாக்கத்துறை இப்போது அவரை சிபிஐ கைது செய்து 60 நாட்கள் ஆயிருக்கும் நிலையில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரிக்க துடிக்கிறது. இது உள்நோக்கம் கொண்ட ஒரு செயல். சிதம்பரம் மீது எந்த ஆதாரமும் இந்த வழக்கில் இல்லாத போது அவரை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் குறியாக இருக்கிறது என்று ப.சிதம்பரம் சார்பில் ஆஜராயிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிவில் வாதிட்டார்.

மேலும் இது மட்டுமல்லாமல் 2 ஆண்டுகள் இல்லாத ஆதாரம் இப்போது 15 நாட்களில் ஆதாரம் அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய கபில் சிவில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் அமலாக்கத்துறை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய கோரிக்கையை நிராகரித்து 7 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: