உலகம் மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் Oct 17, 2019 பேச்சு ஆறுகள் பாக்கிஸ்தான் மோடி இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. இந்தியா அதைத் தடுத்தாலோ அல்லது திசை மாற்ற முயற்சித்தாலோ அது ஆக்கிரமிப்பு செயல்தான் என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரைத் தடுப்போம் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியானா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டுவருவேன். பாகிஸ்தான் பக்கம் பாயும் நீரைப் பெறுவதற்கு ஹரியானா, ராஜஸ்தான் மாநில மக்களுக்கு அதிக உரிமை இருக்கிறது. இந்த நீரை இதற்கு முன் ஆண்ட அரசுகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் உங்கள் போராட்டத்தில் உங்களுக்காக மோடியாகிய நான் போரிடுவேன் எனக் கூறியிருந்தார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நிதிநீரை தடுப்போம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு முகமது பைசல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகள் மீது எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது. அந்த நதிநீரை திசை மாற்றவோ அல்லது தடுக்கவோ இந்தியா முயன்றால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது என முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!
இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!