அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரி விதிப்பை இந்தியா குறைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்

வாஷிங்டன் : அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பல பொருட்கள் மீதான வரி விதிப்பை இந்தியா குறைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், வரும் 21ஆம் தேதி மத்திய அமைச்சரகங்களுக்கான இடையேயான கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு வரி விதிப்பை குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
Advertising

போர்பன் விஸ்கி, குளிர்பதன நிலையில் உள்ள கோழிக்கறி மீதான வரி விதிப்பை குறைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்பன் விஸ்கி மீதான வரி 150 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், குளிர்பதன நிலையில் உள்ள கோழிக்கறி மீதான வரி 100 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.வால்நட், ஆப்பிள், தூய எத்தனால், பால் அல்புமின் (milk albumin) போன்றவற்றிற்கும் வரி குறைக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுடனான வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில், வரிகளை குறைக்க இந்தியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories: