கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி

வாஷிங்டன்:இணையதள ஜாம்பவான்களான முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் வரிகளை விதித்துள்ளது. அதாவது இணையதள பரிவர்த்தனைகளுக்கு 3 சதவீத வரி செலுத்த வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியும், 2020-ம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட்டில் இந்த புதிய வரிக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸ் நாடும் இதே டிஜிட்டல் வரியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, பிரான்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஒப்பந்த அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக விதிக்கப்பட்ட வரியை திரும்ப செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில், ‘அந்த இணைய நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எனக்கு எதிராக தான் செயல்பட்டார்கள். ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி விதித்தால் அது அமெரிக்காவுக்கும் விதித்ததாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரி விதிப்பு செயல் விரும்பத்தகாத ஒன்றாகும்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: