×

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெய்கோபாலின் ஜாமின் மனு விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: சென்னை பள்ளிக்கரனையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமின் மனு விசாரணையை வருகின்ற அக்டோபர் 24-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக பிரமுகர் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின் வந்த லாரி ஏறியதால் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெய்கோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கில் கடந்த மாதம் 27ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் தனது மகளின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலை நடுவே பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் ஒரு துர்திஷ்டவசமான சம்பவம் எனவும், எனவே இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஜாமின் மனு கடந்த 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டிர்கள் என நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அதேபோல, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெய்கோபால் மற்றும் அவரது உறவினர் தொடர்ந்த ஜாமின் வழக்கை அக்டோபர்-24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Tags : death ,Jaicobal ,Banerjee Subhashree ,hearing ,AIADMK ,Icort ,Banner Subasree ,Jayagopal , Jayagopal, bail plea, adjournment, banner case, Subasree death
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...