பிலிப்பைன்ஸ் நாட்டின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை இரவு தென்மேற்கில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் 2 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியது. இதனால் பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

Advertising
Advertising

துலுனன் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது குழந்தையும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மாரடைப்பால் மிலங்க் நகரில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், மேக்சய்சய் பகுதியில் வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையும், நிலச்சரிவில் வீடு புதைந்ததில் குழந்தை மற்றும் அதன் தாய் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: