×

சோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து

புழல்: சோழவரம் அடுத்த பண்டிகாவனூர், பெரியபாளையம் செல்லும் சாலையின் அருகே ஏராளமான தனியார் குடோன்கள் உள்ளன. இங்குள்ள ஒரு சிகரெட் மற்றும் புகையிலை ேசமிக்கும் குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்ததும் அருகில் இருந்த குடோன் ஊழியர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில்  வைக்கப்பட்டு இருந்த பல கோடி மதிப்பு சிகரெட் பண்டல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இடி தாக்கி தீ விபத்து ஏற்பட்டதா? யாராவது தீ வைத்தர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

„ அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது பிரதான சாலை மாநகர போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பழுதான ஏடிஎம் இயந்திரங்களை சரிபார்த்து அனுப்பும் பணி நடைபெறும். இங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் மாலை கம்பெனியை பூட்டிவிட்டு சென்றனர். சுப்பையா என்பவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 10 மணிக்கு கம்பெனியில் இருந்து புகை வெளியேறியது. தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 5 கம்ப்யூட்டர்கள், ஏசி மிஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், விசாரித்தபோது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.Tags : cigarette kudon ,Cigarette cannon ,Cholavaram ,Near Cholavaram Fire , Cholavara,cigarette, cannon
× RELATED குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து