×

இன்று உறவினருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலனை திருமணம் செய்த மணப்பெண் போலீசில் தஞ்சம்: மாதவரத்தில் பரபரப்பு

திருவொற்றியூர்: மாதவரம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மகேஷ் கொத்தனார். இவரது மகள் மோனிகா (20). இவருக்கும், ஆந்திர மாநிலம் சிங்கார கொண்டா பகுதியை சேர்ந்த உறவினரான மனோஜ் என்பவருக்கும் திருமணம் பேசி முடித்து இருந்தனர். திருமணம் இன்று (17ம் தேதி) திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தோழியை பார்த்து விட்டு வருவதகா கூறிவிட்டு வெளியே சென்ற மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. அவருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதையடுத்து மகேஷ் மாதவரம் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மோனிகா தந்தை மகேஷுக்கு போன் செய்து, காதலித்த டூவீலர் மெக்கானிக்காக கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். விசாரணையில் சாஸ்திரி நகரை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் மோனிகாவும் ஒரு வருடமாக காதலித்ததும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகேஷ் தனது உறவினரான  மனோஜ் என்பவரை திருமணம் செய்ய பேசி முடித்ததும் தெரிந்தது. இதனால் கடந்த 15ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியேறி அதே பகுதியில்  காத்துக்கொண்டிருந்த கார்த்திக்கை திருவேற்காடு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் என்ற விவரம் தெரிய வந்தது. காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்திக்கும், மோனிகாவும் மேஜர் என்பதால் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.


Tags : Bride ,lover ,cousin , Having married, relative, marry boyfriend , Madhavaram
× RELATED பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா...