×

கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மணலி நோக்கி மாநகர பஸ்  (த.எண்.44சி) நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சின்ன ஸ்டான்லி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது 3 பேர் போதையில் ஏறினர்.டிக்கெட் எடுக்க சொன்னதால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பவர்ஹவுஸ் நிறுத்தம் வந்ததும் கண்டக்டரை தாக்கிவிட்டு, பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த கண்டக்டர் ஆறுமுகசாமி (37), டிரைவர் சுதாகரன் (37) ஆகிய இருவரும் ஆர்.கே.நகர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (28), ஜெகன் (19), ஆகாஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.Tags : conductor Conductor Hit , Conductor, Hit,arrested
× RELATED ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம்...