×

கழிவுநீர் இணைப்பு பெற 19ம் தேதி சிறப்பு முகாம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம்-1 முதல் 2 பகுதிகளுக்குட்பட்ட காமராஜர் நகர், ஜே.ஜே. நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரம் குப்பம், அண்ணா நகர், கமலாம்மாள்  நகர்,  சின்னக்குப்பம், காந்தி நகர், இந்திரா நகர், காட்டுக்குப்பம், நேரு நகர், பெரியக்குப்பம், திலகர் நகர் மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள்  முடிவடைந்துள்ளது.  எனவே வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு  சென்னை குடிநீர் வாரியம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் லேனில் உள்ள பகுதி அலுவலகம்-1ல் வரும் 19ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், பொதுமக்கள் கழிவுநீர் இணைப்பிற்கான தொகையை வரைவு காசோலையாக சிறப்பு முகாமிலேயே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த கழிவுநீர் இணைப்பு வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். விவரங்களுக்கு 8144930901, 8144930201 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Camp ,Special Camp ,Drinking Water Board , Special Camp, Receive Sewer, Drinking Water Board
× RELATED சென்னை குடிசைப்பகுதி மக்கள் 7 நாள் தனிமை முகாமில் இருந்தால் ரூ1000