14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இம்மாத இறுதியில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) செயல்பட்டு வருகிறது. இக்கவுன்சில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்ட புத்தகங்களை விநியோகித்து வருகிறது. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட உள்ள நிலையில், அதன் அடிப்படையில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் ஹிருஷிகேஷ் சேனாபதி கூறுகையில், ‘‘தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 1975, 1988, 2000, 2005ல் மாற்றி அமைக்கப்பட்டது.

Advertising
Advertising

தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 5வது முறையாக பாடத்திட்டத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்படுவதற்காக காத்திருக்கிறோம். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். இதற்கான குழு இம்மாத இறுதியில் அமைக்கப்பட உள்ளது,’’ என்றார்.ஏற்கனவே, கடந்த 2 மாதமாக தற்போதுள்ள பாடத்திட்டத்தை என்சிஇஆர்டி மறுஆய்வு செய்து வருகிறது.

Related Stories: