மே.வங்க தலைமை செயலருக்கு சிபிஐ நோட்டீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு ெதாடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று மேற்கு வங்க மாநில தலைமை செயலகத்துக்கு வந்தனர். நேற்று காலை தலைமை செயலகம் வந்த சிபிஐ அதிகாரிகள், தலைமை செயலாளர் ராஜீவ் சின்கா, நிலங்கள் துறை சிறப்பு அதிகாரி ஆகியோரிடம் தனித்தனியாக நோட்டீஸ் வழங்கினர். இதில், ரோஸ்வேலி முறைகேடு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், நிலங்கள் துறை சிறப்பு அதிகாரி 18ம் தேதிக்குள் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertising
Advertising

Related Stories: