சிறப்பாக விளையாடுவோம்...: பயிற்சியாளர் கிரிகோரி உற்சாகம்

சென்னை, அக்டோபர். 17: ஐஎஸ்எல் கால்பந்து அணியான சென்னையின் எப்சி உடன் வொர்க்கபெல்லா நிறுவனம் பணியிட பங்குதாரராக இணைந்து உள்ளது. இதன் மூலம் சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள வொர்க்கபெல்லா அலுவலகங்களை சென்னையின் எப்சி பயன்படுத்திக்கொள்ளும். அணியை உத்வேகப்படுத்தும் பணிகளிலும்  இந்ந நிறுவனம் ஈடுபடும். இதற்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் சென்னையின் எப்சி அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரி பேசும்போது, ‘சென்னையின் எப்சி அணி இந்த முறை புதிய உத்வேகத்துடன் களம் காண உள்ளது. புதிதாக திறமை வாய்ந்த  வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியிலுள்ள வீரர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது.

Advertising
Advertising

மேலும் அகமதாபாத், ஜாம்ஷெட்பூர் என பல்வேறு இடங்களில்  பயிற்சி முகாம்கள் நடத்தினோம். பயிற்சி போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி இருக்கிறது. எனவே வருகின்ற சீசன் சென்னை அணிக்கு வெற்றிகரமாக அமையும்‌. தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேஷ், எட்வின் வென்ஸ்பால் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். திறமையான வீரர்கள். அவர்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வோம்’ என்றார். இந்த சந்திப்பின்போது சென்னையின் எப்சி வீரர் ஆண்ட்ரே ஸ்கெம்ப்ர் (இத்தாலி),   வொர்க்கபெல்லா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரே ரத்தா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: