சென்னை பல்கலை. தடகளம்: லயோலா, எம்ஓபி சாம்பியன்

சென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான தடகளப் போட்டியில் லயோலா, எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 52வது ஏ.எல்.ராமசாமி நினைவு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. மாணவர்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற லயோலா கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடம் டிஜி வைஷ்ணவா கல்லூரிக்கு கிடைத்தது. மாணவிகளுக்கான பிரிவில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

Advertising
Advertising

இந்த பிரிவில் சோகா இகேடா கல்லூரி 2வது இடம் பெற்றது. தனிநபர் பிரிவில் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி மாணவர் நிதின் சாம்பியன் பட்டம் வென்றார். மாணவிகள் பிரிவில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவி ஷெரின் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் துரைசாமி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குனர் டாக்டர் மகாதேவன், சிண்டிகேட் உறுப்பினர்கள் பேராசிரியர் காந்திராஜ், டாக்டர் லலிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்

Related Stories: