42% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

புதுடெல்லி : அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 42  சதவீதத்தினர் கோடீஸ்வரர்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘‘அரியானா தேர்தலில்  போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 481 பேர், அதாவது 42 சதவீதத்தினர்  கோடீஸ்வரர்கள். இவர்களில் 16 சதவீதத்தினருக்கு 5 கோடி அல்லது அதற்கு மேலும், 14 சதவீதத்தினருக்கு 2 கோடி முதல் 5 கோடி வரையும் சொத்துக்கள் உள்ளது. வேட்பாளர்களில் 10%  பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன’’ என கூறப்பட் டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: