பாதுகாப்பை மீறி திருப்பதியில் செல்போனில் படம் பிடித்த பக்தர்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் நேற்று முன்தினம் வெளிநாட்டு இஸ்கான் பக்தர்கள்  வந்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு தீர்த்தம் மற்றும் சடாரி ஆசிர்வாதம் செய்யக்கூடிய பகுதியில், தான் கொண்டுவந்த செல்போனில் வெளிநாட்டு பக்தர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த தேவஸ்தான ஊழியர் அந்த பக்தரை பிடித்து விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது, செல்போன் கொண்டு வரக்கூடாது என்பது தனக்கு தெரியாது என பக்தர் தெரிவித்ததால் அவருக்கு கவுன்சலிங் செய்து மீண்டும் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். 2 கட்ட பாதுகாப்பை மீறி அவர் செல்போன் உள்ளே கொண்டு வந்தது குறித்து விசாரணை நடக்கிறது.

Related Stories: