ம.பி.யில் குண்டும் குழியுமான சாலைகள் நடிகை ஹேமாமாலினி கன்னம்போல் அழகாக மாறும் : காங்கிரஸ் அமைச்சர் பேச்சு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக கமல்நாத் இருந்து வருகின்றார். இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் சஜ்ஜன் வெர்மா, சட்டத்துறை அமைச்சர் பி.சி. சர்மா ஆகியோர் ஹபிப்கன்ஞ் ரயில் நிலையம் அருகே உள்ள சாலைகளை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சர்மா கூறுகையில், “சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அம்மை நோய் ஏற்பட்டது போன்று ஆங்காங்கே தழும்புகளோடு,  பாஜ பொது செயலாளர் விஜயவர்கியாவின் கன்னங்களை போன்று உள்ளது. முதல்வர் கமல்நாத் வழிகாட்டுதலில் பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வெர்மா தலைமையில் 15 நாட்களில் சாலைகள் சீரமைக்கப்படும். 15 -20 நாட்களில் ஹேமாமாலினியின் கன்னங்கள் போன்று அழகான சாலைகள் அமைக்கப்படும்.

Advertising
Advertising

மாநிலத்தில் உள்ள சாலைகள் வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கில் உள்ளது போன்று அமைக்கப்பட்டது. ஒரு மழை பெய்தவுடன் இந்த சாலைகளுக்கு என்ன ஆனது. எங்கும் குண்டும், குழியுமாக காணப்படுகின்றது என்றார். 2 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சவுகான் கூறுகையில், மாநிலத்தில் சாலைகள் வாஷிங்டன்னில் இருப்பதை காட்டிலும் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார். அவரை விமர்சிக்கும் வகையில் இந்த கருத்தை பிசி சர்மா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பேசிய அமைச்சர் வெர்மா, மாநில அரசு சாலைகளை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 1,188 கோடி கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை நிதியை வழங்கவில்லை” என்று கூறியிருந்தார்.

Related Stories: