அனுமதியின்றி அஜ்மீர் தர்காவில் தங்கிய 100 பேர் வெளியேற்றம்

அஜ்மீர்: ராஜஸ்தானில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம். மேலும், தர்கா கமிட்டியின் அனுமதி பெற்ற பலர் தர்காவுக்குள் இரவு தங்கியிருந்து செல்கின்றனர். ஆனால், சிலர் அனுமதி இல்லாமல் தங்குவதாகவும், அவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertising
Advertising

இதனால், தர்கா கமிட்டியுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தினமும் இரவு சோதனை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை போலீசார் இரவு சோதனையை தொடங்கினர். கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் அனுமதியின்றி தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Related Stories: