நாடாளுமன்ற குளிர்கால தொடர் நவ.18ல் துவங்கும்?

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரத் துறையின் அமைச்சரவை கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம் 3வது வாரத்தில் தொடங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 18ம் தேதி இந்த தொடர் தொடங்கும் என்றும், டிசம்பர் 25ம் தேதி முடியும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்கி, ஜனவரி முதல் வாரம் வரை நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: