காங். எம்பி ராஜினாமா : பாஜ.வில் இணைய முடிவு

பெங்களூரு : கர்நாடகா மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி.யான  கே.சி.ராமமூர்த்தி நேற்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில் கடந்த 1952ம் ஆண்டு  சிக்கமுனியப்பா ரெட்டியின் மகனாக பிறந்தவர் கே.சி.ராமமூர்த்தி. கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், கல்வி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வந்தார்.  2016ம் ஆண்டு கர்நாடக  மாநில சட்டபேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மூன்றாண்டுகளாக அக்கட்சி எம்பி.யாக  செயல்பட்டு வந்த அவர், நேற்று காலை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதம்  கொடுத்தார். ராமமூர்த்தியின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ்  வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை பாஜ.வினர் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  வி.எஸ்.உக்ரப்பா குற்றம்சாட்டினார்.

Advertising
Advertising

இது  குறித்து ராமமூர்த்தி கூறுகையில், ‘‘ எனது  அடுத்த அரசியல் பயணத்தை பாஜ.வில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளேன்,’’ என்றார்.

மஜத எம்எல்ஏ ராஜினாமா:  கர்நாடகாவில் மஜத எம்எல்ஏ.வாக இருப்பவர் மகேஷ். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தீவிர ஆதரவாளர். இவர் தனது  எம்எல்ஏ பதவியை கடந்த மாதமே ராஜினாமா செய்து விட்டதாக நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில்,  ‘‘கடந்த மாதமே எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அதற்கான  கடிதத்தை பேரவை தலைவரிடம் கொடுத்துள்ளேன். அதன் மீது பேரவை தலைவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ராஜினாமாவை ஏற்பதும். மறுப்பதும் அவரின்  தனிப்பட்ட உரிமை. தனிப்பட்ட காரணத்திற்காக தான் பதவியை ராஜினாமா  செய்துள்ளேன். கடைசி வரை எனக்கு தேவகவுடாவும், குமாரசாமியும் தான்  தலைவர்கள்,’’ என்றார்.

Related Stories: