இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: தேர்தல் தோல்வி பயத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மீது முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆதாரமற்ற  குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். கலைஞர் முதல்வராக இருந்தபோது 10, ஏப்ரல் 2008ம் ஆண்டில் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில்  வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதற்கு மத்திய அரசு ஜூலை 2008ல் ஒப்புதல் வழங்கி, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் 2008, நவம்பர் 18ம் தேதி  வெளியிட்டது.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 14 ஆயிரம் கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக நிதிநிலை அறிக்கையில் 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொழிற்சாலைகள் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை  வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டது. கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மகத்தான பங்கை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் 2011ல் முதல்வராக  ஜெயலலிதா பொறுப்பேற்றதும் கிடப்பில் போடப்பட்டன.

Related Stories: