×

வேலை கிடைக்கலனா என்ன.. நம்ம மண் இருக்கே.. தஞ்சை விவசாயியான சென்னை இன்ஜி. மாணவி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தஞ்சை: சென்னையில் வளர்ந்து, படித்து இன்ஜினியரிங் பட்டம் முடித்த இளம்பெண் தஞ்சையில் விவசாய செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மக்கள், விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே பாதரக்குடியை சேர்ந்தவர் குறிஞ்சிமலர் (22). இவர் இளம்பருவம் முதல் சென்னையில் வளர்ந்து, அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வேலை தேடியும் கிடைக்காததால் சொந்த ஊருக்கே சென்று விவசாயம் செய்து வருகிறார்.

இதுபற்றி அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் பிறந்தது பாதரக்குடியில். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னை. நான் இப்போது சொந்த ஊரில் வந்து செட்டிலாகிவிட்டேன். பிடெக் பயோ டெக்னாலஜி படித்துள்ளேன். சொன்னா நம்பமாட்டீங்கள். படிப்பபை முடிச்சதும் வேலை தேடினேன். 2 ஆண்டுகளாக தேடியும் வேலை கிடைக்கல. இப்போது எனக்கு 22 வயது. அப்பதான் எனக்கு தோனுச்சு. நாம ஏன் வேலை தேடி அலையனும். இயற்கையை சார்ந்து வாழலாமே என்று. அந்த நோக்கத்தில் சொந்த ஊருக்கு வந்த நான் சண்முகசுந்தரம் ஐயாவை சந்தித்து விவசாயம் செய்வதாக கூறினேன். அவரது பண்ணையிலே சேர்ந்தேன்.

தற்போது 3 ஏக்கரில் தேக்கு நட்டு கொடுத்துள்ளேன். எனது முதல் புராஜக்ட் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அதில் மிளகு ஏற்றி விடுவோம். இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பதான் தெரியுது ஒரு பெண்ணும் விவசாயம் செய்ய முடியும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விவசாயத்தில் சாதிக்க முடியும். நம்ம ஊர்ல, நம்ம மண்ல.. நம் வாழ்க்கைக்கு தேவையானதை நாமத்தான் செய்துகொள்ள வேண்டும். மற்றவர்களை சார்ந்து வாழக்கூடாது. மரம் வளர்ப்போம். மழைபெறும் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி விவசாயிகள், மக்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Student , Tanjore Farmer, Madras Eng. Student
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...