×

தமிழகத்தில் பல அடிப்படை பிரச்சனைகள் உள்ளன: அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு

நெல்லை: சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நாங்குநேரி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சி காலத்தில்  கலைஞர் முதலமைச்சராக இருந்த போது பச்சையாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பல்வேறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தாமிரபரணி கருமிணி ஆறு நம்பி ஆறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மழை, சூறாவளி, இயற்க்கை பேரிடர்வு ஏற்படும் சூழ்நிலையில் வாழை விவசாயிகள் பல இழப்புகளுக்கு ஆளாகின்றனர்.

ஆனால் நடந்து வரும் ஆட்சியில் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இழப்பீட்டு தொகை வழங்க கூடிய முயற்சியில் ஈடுபடுவோம் என கூறினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்புத் திட்டத்தை கடந்த 8ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது 2020-க்குள் நிறைவேற்றிவிடுவோம் என்று முதலமைச்சர் சொல்வது கண்துடைப்பு. நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை. நீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட பலர் தற்கொலை செய்து கொண்டனர். கலைஞர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தமிழகத்திற்குள் நுழையவில்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு நீட் தமிழகத்திற்குள் நுழைந்து விட்டது. மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிந்தித்து பார்க்கவில்லை. தமிழகத்தில் பல அடிப்படை பிரச்சனைகள் உள்ளன. அடிப்படைபிரச்சனைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Tags : elections ,Tamil Nadu ,Stalin ,speech ,Nankuneri. , The basic problem is the local election, Nankuneri, Stalin
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள...