×

உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு அதன் சிகரம் எட்டியுள்ளது: இந்தியா இன்று மிக பெரிய சவால்களை சந்தித்து வருகிறது: மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் அக்.,21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மகாராஷ்டிராவின் பன்வல் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; டெல்லியில் என்னை எப்படி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தீர்களோ அதே போன்று மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது குறித்து காங்கிரஸ் கூட்டணியினர் மகாராஷ்டிரா தேர்தலில் பிரச்சினை எழுப்புவது மிகவும் அவமானகரமானது. காஷ்மீர் விவகாரம் மகாராஷ்டிரா தேர்தலில் எந்தவிதத்திலும் பாதிக்காது என்ற அவர், வீர சாவர்க்கர் இந்த நாட்டுக்காக பெரும்பாடுபட்டவர் என்றார்.

தேசியத்தை ஊக்குவித்த அவர், பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்று மோடி தெரிவித்தார். சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில், இன்று அரசியல் லாபங்களுக்காக குரல் எழுப்பப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் மராட்டியத்தில் பயங்கரவாதம் மற்றும் வெறுப்புவாத சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் இப்போது குற்றவாளிகள் வெவ்வெறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு இன்று அதன் சிகரம் எட்டியுள்ளது. இந்தியா இன்று மிக பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. புதிய இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம்.

நாட்டை சிறந்த தேசம் ஆக்குவதற்காக மராட்டியம் பெருமளவில் பங்கு வகித்துள்ளது. வங்கி கடன்கள் மீனவர்களுக்கு எளிதில் கிடைக்க உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களது படகுகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. சேரிப்பகுதி மக்களுக்கு 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் பணிகள் பன்வேல் பகுதியில் நடந்து வருகின்றன எனவும் கூறியுள்ளார்.


Tags : India ,Modi ,world ,speech ,Maharashtra. India ,campaign , India, peak, Maharashtra, PM Modi
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு