×

நிலவு பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்காக 2 நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியது நாசா

வாஷிங்டன்: நாசா தனது நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வரும் 2024ம் ஆண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது அணிய சிறப்பம்சம் வாய்ந்த இரு விண்வெளி உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட உடைகளில் ஒன்று நிலவின் தென்துருவத்தில் விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்கள் எளிதாக அதிகபட்ச அசைவுகளை மேற்கொள்ளும் வகையிலும், எளிதான கைகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்கு வழிவகுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உடையான ஆரஞ்ச் நிற உடை விண்வெளி வீரர்கள் நிலவுக்கு புறப்பட்டு செல்லும் போது, பின்னர் மீண்டும் திரும்பும் போதும், புவி சூழலுக்குள் நுழையும் போதும் ஏற்படும் சூழல் மாறுபாடுகள் விண்வெளி வீரர்களின் உடல்நிலையை பாதிக்காமல் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த முறை நிலவின் தென் துருவத்துக்கு நாசா அனுப்பிய ராக்கெட் அங்கு மோதி சிதறியது. ஆனாலும் அதன் மூலம் நிலவின் மேற்பரப்பிற்கு கீழ் பெருமளவிலான பனிக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : moon missionaries ,NASA , Moon Trip, Player, 2 Modern Space Style, NASA, Intro
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...