மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

நியூயார்க்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் அதிகாரங்களில் இருந்த காலகட்டத்தில் தான், பொதுத்துறை வங்கிகள், மோசமான நிலையை அடைந்ததாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தின், சர்வதேச மற்றும் பொது விவகார பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலம், பொதுத்துறை வங்கிகளுக்கு மோசமான காலமாக இருந்தாலும், அவற்றை மீட்டு, பொதுத்துறை வங்கிகளுக்கு, வாழ்வளிப்பது தான் தமது முதன்மையான கடமையாக கருதுவதாகவும், நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரிசர்வ் வங்கி ஆளுநராக, ரகுராம் ராஜன் இருந்த காலத்தில் தான், தங்களோடு நட்பாக இருந்த தலைவர்களிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில், வகைதொகையின்றி கடன்கள் வழங்கப்பட்டதாகவும், நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

 ரகுராம் ராஜனின் தவறான செயல்பாடுகளின் காரணமாகவே, பொதுத்துறை வங்கிகள், அரசின் பங்கு முதலீட்டு எதிர்ப்பார்த்து காத்திருக்கும், துரதிருஷ்டமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: