அதிக காற்றுமாசுபட்டால் பாதிக்கப்பட்ட நம்பர் ஒன் நகரம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

‘‘அடுத்த வருடத்தில் சுமார் 70 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறக்கப்போகின்றனர்...’’ என்று பீதியைக் கிளப்பி யிருக்கிறது சமீபத்திய ஆய்வு.  சுமார் மூவாயிரம் நகரங்களில் வீசுகின்ற காற்றின் தரத்தை ஆய்வு செய்து இந்த விவரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தவிர, உலகில் காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்ட பத்து நகரங்களில் ஏழு நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. குறிப்பாக காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்ட தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம்.

அத்துடன் டெல்லிக்கு அருகில் உள்ள குருகிராம், நொய்டா, பாட்னா, லக்னோ போன்ற நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டால் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டது நினைவிருக்கலாம். முதல் இருபது இடங்களில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த நகரங்கள் தான் அதிகமாக இடம்பிடித்துள்ளன. ஒரு காலத்தில் காற்று மாசுபாட்டால் சீர்குலைந்து போன பெய்ஜிங் இன்று 122-வது இடத்தில் உள்ளது.

Related Stories: