×

சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி.. 3 பேர் படுகாயம்

பெய்ஜிங்: சீனாவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலைக்குள் திடீரென வெடி விபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து ஆலையில் பல்வேறு பகுதிகளில் தீப்பற்றி எரிந்தது.

இதனால் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளாளர்கள் அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடினர். இருப்பினும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்சமாக, கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : China ,chemical plant accident , China, chemical plant, explosion
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...