அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன்

சென்னை: தென்னிந்தியாவில் கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்று வீசுவதை அடுத்து பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்க்பட்டுள்ளது. அடுத்த வரும் 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: