அண்டை மாநிலங்களில் தொடர்ந்து வேளாண் கழிவுகள் தீ வைத்து எரிப்பு: தலைநகர் டெல்லியில் 6-வது நாளாக காற்று மாசு...மக்கள் வேதனை

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 6-வது நாளாக காற்று மாசு அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அம்மாநில மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாய், அரியானா, உத்தரபிரேதேசம்,  ராஜஸ்தானில், தீ வைத்து எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால், டெல்லியை நோக்கி வீசும் காற்றில் மாசு அதிகரித்துள்ளது. தற்போது, டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் அறுவடைக் காலம் முடிந்துள்ள நிலையில், விவசாய கழிவுகள்  எரிக்கப்பட்டு வருவதால், டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றின் மாசு 208 என்ற அளவுகோலில் இருந்தது. இது சனிக்கிழமை 222 ஆக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமையான 256  உயர்ந்துள்ளது.

இதுதொடர்பான நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. வேளாண் கழிவுப் புகையால், டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் தரமானது மோசம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக துவாரகா பகுதியில்  காற்றின் தரமானது 480 என மிகவும் மோசமான புள்ளி அளவில் உள்ளது. துவாரகாவைத் தொடர்ந்து ரோகினி, நேரு நகர், சிரிஃபோர்ட் ஆகிய இடங்களில் காற்றின் தரமானது மிக மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் ஆய்வாளர் எல்.எஸ்.குறிஞ்சி கூறுகையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள விவசாயிகள் கடந்த 2 நாட்களாக விவசாயகழிவுகளை எரித்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக  காற்றின் திசை டெல்லியை நோக்கி உள்ளது. இதனால், அதிகப்படியான புகை டெல்லிக்கு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், காற்று மாசு டெல்லியில் மிகவும் ஆபத்தாகிவிடும் என்றார். கடந்த 3 மாதங்களில் டெல்லியின் காற்றின் தரம்  மிகவும் மோசமாக நிலைக்கு சென்றுள்ளது. பஞ்சாய், ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில், விவசாய பொருட்களை எரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015-ம் ஆண்டு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: