லட்சுமி விலாஸ் வங்கிக்கு 1 கோடி அபராதம்

மும்பை: ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைப்பிடிக்காததால், லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடனான நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு மேற்கொண்டது. வருவாய் அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்படுத்துதல் (ஐஆர்ஏசி) விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காதது ஆய்வில் தெரியவந்தது. மேலும் வங்கி ஒழுங்குமுறை விதி மீறல் தொடர்பாகத்தான் இந்த அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான சேவையில் எந்த குறைபாடும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த வங்கியுடன் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டு ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த இணைப்பு முடிவை ரிசர்வ் வங்கி நிராகரித்த ஒரு வாரத்தில் வங்கியில் ஆய்வு மேற்கொண்டு இந்த அதிரடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: