தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் இன்று சாட்சியம் அளிக்க சீமானுக்கு ஆணையம் சம்மன்

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக   இன்று சாட்சியம் அளிக்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த  ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை  போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இது குறித்து, தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை  ஆணையம்  14 கட்டங்களாக விசாரணை நடத்தியது. இதுவரை 380க்கும்  மேற்பட்டோரின் வாக்குமூலங்கள் பதிவு  செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆணையத்தின் 15ம் கட்ட விசாரணை இன்று துவங்கி  19ம் தேதி வரை நடக்கிறது. இதில் இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 15ம் கட்ட விசாரணையில் தினமும் 5 பேர் வீதம் மொத்தம் 20 பேரிடம் விசாரணை மேற்கொள்ள ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: