தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரும்.. நாட்டின் பாதுகாப்பே எப்போதும் முக்கியம்: அரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரியானா: அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி  ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அங்கு, கடைசிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ள  நிலையில், சர்கி தாத்ரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரும் என்ற அவர், நாட்டின் பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என கூறினார். இந்தியாவுக்கு சொந்தமான ஆற்று நீர் கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் வழியே வீணாகப் பாய்கிறது.

அரியானா மாநில விவசாயிகளுக்கு சொந்தமான அந்த தண்ணீர் இனி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றின் நீரின் மீது அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. இந்த தண்ணீரை பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் தடுக்க, முந்தைய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அந்த தண்ணீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா அனுமதிக்காது என்றும் உறுதி அளித்தார். சிந்து மற்றும் 5 துணை ஆற்று நீரை பகிர்ந்து கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதன்படி பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று ஆற்று நீரை இந்தியாவும், சிந்து, ஜீலம், ஜீனாப் ஆகிய ஆறுகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் இந்திய ஆறுகளில் உள்ள தண்ணீரை காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மூன்று திட்டங்களின் மூலம் கொண்டு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: