குழந்தையை பாதிக்கும் திரைகள்!

குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற்பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது.

இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம். திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?

குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல்.

அட்டையில்:  இசை

படம்: குணா

Related Stories: