×

சிதம்பரம் அருகே வாகன சோதனையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சிறப்பு SI மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாகன சோதனையின் போது தம்பதியினரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சிறப்பு எஸ்.ஐ ஒருவரையும், காவலர் ஒருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காவல் கண்காணிப்புக்குட்பட்ட மேலவீதி கஞ்சித்திட்டு பகுதி அருகே நேற்று முன்தினம் சிறப்பு எஸ்.ஐ வேல்முருகன் மற்றும் மரிய சார்லஸ் ஆகியோர் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். அவர்களை மடக்கிய காவல் துறையினர் தம்பதியினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு ஒரிஜினல் ஆவணத்தை தரும்படி கூறியுள்ளார்.

ஆனால் தம்பதியினர் ஒரிஜினல் இன்றி நகலை கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து தம்பதியினர் பலமுறை காவலர்களை கேட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரிஜினல் ஆவணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று காவலர் மரிய சார்லஸ் தம்பதியினரை கட்டாயப்படுத்தி கடுமையாக நடந்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அவர்களுக்கு பெரிதும் மனஉளைச்சளை ஏற்படுத்தியது. பைக்கில் 4 பேர் சென்றதாக கூறி தம்பதியை இருவரும் தடுத்து தாமதித்த காட்சி சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் பரவியது. தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் தலைமையில் சிறப்பு உதவிஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


Tags : clutter ,Guard Armed Forces ,Chidambaram Chidambaram ,vehicle inspection , Chidambaram, Vehicle Testing, Clutter, Special SI, Guard, Armed Forces, Transition
× RELATED தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனச்...