×

இந்தியா அடுத்த போரை உள்நாட்டில் தயாராகும் ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும்: ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் 41-வது (டிஆர்டிஓ) இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது அவர் இந்தியா அடுத்த போரை உள்நாட்டில் தயாராகும்  ஆயுதங்களுடன் எதிர்த்துப் போராடி வெல்லும் எனவும், எதிர்கால போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது ஆகும் என கூறினார். நாம்  எதிர்கால போருக்கான அமைப்புகளைப் ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார். சைபர், ஸ்பேஸ், லேசர், எலக்ட்ரானிக் மற்றும் ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சியை நாம் பார்க்கத் தொடங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மூலம் ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் முன்னேறியுள்ளது என கூறினார். முக்கிய தொழில்நுட்பங்கள் தேவை எனவும், அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என தேசிய பாதுகப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். பாதுகாப்பு அமைப்புகள், உளவுத்துறைகள் ஆகியவற்றுடன் இணைந்து, எதிரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதற்கு நமக்கு என்ன தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என கூறினார. நன்கு பயிற்சி பெற்ற ராணுவம், தாக்குதல் மற்றும் இலக்கு குறித்து முடிவு செய்கிறது என கூறினார். மேலும் அவை இந்தியாவை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என தெரிவித்தார். நமது எதிரிகளுக்கு நாம் கொடுக்க வேண்டியது என்ன என்பதை நாங்கள் கடுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறினார்.

இந்திய வரலாற்றில் நாம் இரண்டாவது இடம் வந்ததற்கான வரலாறு உள்ளது எனவும் கூறினார். ஆனால், இரண்டாம் இடம் வந்தவர்களுக்கு எந்த கோப்பையும் கிடையாது. எதிரிகளை விட நீங்கள் சிறந்தவராக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால், நவீன உலகில் பணமும், தொழில்நுட்பமும் தான், ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இரண்டில் தொழில்நுட்பம் தான் முக்கியம் என்று கூறினார்.


Tags : Bipin Rawat ,war ,India ,Army , India,wins ,next war ,domestic weapons,Army Chief, Staff Bipin Rawat
× RELATED தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம்...