×

அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

* 17, 18-ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக்த்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 17, 18-ம் தேதிகளில் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் குமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மற்றும் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 48 மணி நேரத்தில் மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்அடுக்கு கிழக்கு திசையில் காற்று வீசத் துவங்கியுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்படடுள்ளது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகக் நிலையில், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 44 சென்டி மீட்டர் மழையை தமிழகத்திற்கு தருவது இயல்பு என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம், திருச்சி, மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடை சத்திரம், வெள்ளைகேட், பொன்னேரிகரை, ஓரிக்கை, செவிலிமேடு, குருவிமலை, வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூரிலும் மழை பெய்து வருகிறது.

Tags : Meteorological Department ,districts ,Tamil Nadu ,rainfall , Heavy rainfall , districts ,Tamil Nadu ,next 48 hours,Meteorological Department
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்