×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உதித்சூர்யாவை கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்காதது ஏன்? எனவும் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் குற்றம் நிகழ்ந்திருப்பது உண்மை என தெரியவந்துள்ளது என மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் ஜாமின் மனுக்கு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. உதித் சூர்யா தந்தை தனது ஜாமின் மனுவை திருமப பெற்றால் மாணவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது. உதித் சூர்யாவின் ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார். மாணவர் உதித்சூர்யாக்கு ஜாமின் வழங்க கூடாது என சிபிசிஐடி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் மாணவரை ஜாமினில் விடுவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என சிபிசிஐடி தரப்பு வாதம் செய்து வருகிறது. வெங்கடேசன் உள்ளிட்டோர் உண்மையான காரணத்தை சொல்ல மறுப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Student Udithsuriya ,student ,branch ,impersonation ,Madurai ,High Court. Student Uditsuriya ,Madurai Branch ,Need Selective Impersonation: High Court , Student Uditsuriya ,father, student, Need Selective Impersonation,Madurai Branch
× RELATED போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர்...