ராஜூவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து மிக தவறான ஒன்று: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து மிக தவறான ஒன்று என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, நாங்கதான் ராஜிவை கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜிவை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும் என பேசினார்.

Advertising
Advertising

Related Stories: