ராஜிவ் கொலை பற்றி சர்ச்சை பேச்சு,..சீமான் கைது செய்யப்படுவாரா?

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின்போது, ராஜிவ்காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், சீமான்  கைதாவாரா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.  விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஜெயக்குமாரை நேற்று சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தேச ஒற்றுமைக்கும், தேச பாதுகாப்புக்கும் ஊறு  விளைவிக்கின்ற செயலாகும்.

இதற்கு ஆதாரத்துடன் ஒலிநாடா வீடியோவும் இருக்கிறது. ஒரு தேசத்தின் முன்னாள் பிரதமரை இன துரோகி என்றும், நாங்கள்தான் படுகொலை செய்தோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சீமான் மீது வழக்குப்பதிந்து உடனடியாக  கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்பி,  முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி போலீசார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் (இபிகோ 153), மிரட்டல் (இபிகோ 504) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Related Stories: