சொத்துக்காக தாயை அடித்து உதைத்து உயிரோடு புதைத்த மகன் கைது

திருவனந்தபுரம்: கொல்லத்தில் சொத்துக்காக தாயை அடித்து உதைத்து வீட்டு ேதாட்டத்தில் உயிரோடு புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர். கேரள  மாநிலம் கொல்லம்  செம்மான்முக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன்.  இவரது  மனைவி சாவித்திரி  (72). இவர்களுக்கு சுனில் (51) என்ற மகனும், லாலி  என்ற மகளும் உள்ளனர். சாவித்திரி பெயரில் சொத்துகள் உள்ளன. அதை எழுதி  கேட்டு சுனில் தகராறு  ெசய்துள்ளார். கடந்த மாதம் 3ம்தேதி சாவித்திரி  மாயமானார்.  இது குறித்து லாலி, கொல்லம் கிழக்கு  போலீசில் புகார் செய்தார். சுனில் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  சுனிலிடம் போலீசார்  தீவிரமாக விசாரணை  நடத்தினர். விசாரணையில் தாயை அடித்து கொலை செய்ததை  ஒப்புக் கொண்டார்.

உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிங் டேங்க் அருகே  புதைத்துள்ளதாகவும்  கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி  போலீசார் உடலை ேதாண்டி எடுத்து பிரேத  பரிசோதனைக்கு  அனுப்பினர். இதில்,  சுனில் போதையில் தனது தாயை தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை  இறந்துவிட்டதாக நினைத்து உயிரோடு இருக்கும்போதே குழிதோண்டி  புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத  பரிசோதனை அறிக்கை   வந்த பின்னரே மரணம் எப்படி நடந்தது என்று தெரிய வரும் என போலீசார்  தெரிவித்தனர்.Tags : Property, mother and son arrested
× RELATED சொத்து அடைவதற்காக உயிரோடு உள்ள...