×

அதிமுக 48ம் ஆண்டு தொடக்க விழா: 17ம் தேதி கட்சி கொடி ஏற்றி சிறப்பிக்க வேண்டுகோள்

சென்னை: அதிமுக கட்சியின் 48ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 17ம்தேதி கட்சி கொடி ஏற்றி சிறப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.  அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:  அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வரும் 17ம் தேதி அன்று 48வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை  10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை  அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர்.

நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள்,  தொண்டர்கள் என திரளாக கலந்துகொள்ள வேண்டும். அன்றைய தினம் கட்சியினர் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகள், படங்களுக்கு வண்ணம் தீட்டி கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பிக்க  வேண்டும். அதேபோல், அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : inauguration ,AIADMK , AIADMK,48th inauguration
× RELATED மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்க விழா