×

நாங்குநேரி தொகுதியில் 2வது நாளாக பிரசாரம்: மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்ப்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நெல்லை: மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்ப்போம் என ஏர்வாடியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஏர்வாடியில் பேசியதாவது:  இஸ்லாமியர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவோ செய்துள்ளார். அவரது வழியிலேயே நாங்களும் இஸ்லாமியர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.  ஹஜ் புனித யாத்திரை செல்பர்களுக்கு ஆண்டு தோறும் நிதி உதவி வழங்கி வருகிறோம்.

மத்திய அரசு அதை இடையில் நிறுத்தியது. இருப்பினும் 6 கோடி ரூபாய் நாங்கள் நிதி ஒதுக்கியுள்ளோம்.  மக்களுக்கு நன்மையான திட்டங்களை எப்போதுமே நாங்கள் ஆதரிப்போம். விரோத திட்டங்கள் என்றால் நாங்கள் அதை கண்டிப்பாக  எதிர்ப்போம். கூட்டணி என்பதும், கொள்கை என்பதும் வேறு. கொள்கையை நாங்கள் ஒரு போதும் மாற்றிக்கொண்டது இல்லை.  டெங்கு, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த வெளிநாட்டு மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்து கொசுக்களை  ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Edappadi Palanisamy ,government ,campaign ,constituency ,Nankuneri , Nankuneri constituency, Prasar, Central Government, Chief Minister Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்