×

ஹஜிபிஸ் புயல் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

டோக்கியோ: ஜப்பானில் ஹஜிபிஸ் புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.  ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப் பகுதிகளை ஹஜிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை கடுமையாக தாக்கியது.  இதனால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில், சிகுமா, தாமா உள்ளிட்ட 14 ஆறுகளில் நீர் அபாயக் கட்டத்தை தாண்டி ஓடுகிறது. வெள்ளப் பெருக்கினால் 14,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. தீயணைப்பு படையினர்,  ராணுவத்தினர், பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர், படகு  மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை ஹஜிபிஸ் புயலுக்கு 19 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்திருப்பதாகவும்  15க்கு மேற்பட்டோரை காணவில்லை என்றும் நேற்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.


Tags : Hajibis Storm, Kills 56
× RELATED மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை...